எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்கள்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயர்கள்

சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன் விழா சென்னை வைஎம்சிஏ மைதானத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து நூற்றாண்டு விழா மலரையும் வெளியிடுகிறார்.

வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பெயர்

இடம்பெற்றுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அந்தந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பாளர்கள் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. முறையாக அழைப்பு வந்த பிறகு எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this