சென்னையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் ஜனவரி 29 ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this