மோதலுக்கான காரணங்கள் ஒரு அலசல்

மோதலுக்கான காரணங்கள் ஒரு அலசல்

திங்கள் அன்று உர்ஜித்படேல் 55, ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து  பதவி முடியும்முன் வெளியேறினார், மத்திய வங்கியின் 24 வது  கவர்னராக இருந்து விடைபெற்ற உர்ஜித்படேல் செப் 5 2016 ஆம் ஆண்டு ஆர்பிஐ கவர்னராக பதவியேற்றார்.

 

Image result for urjith patel

ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்த உடன் பா.ஜ.க அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

உர்ஜித் படேலின் ராஜினாமா மத்திய அரசுக்கும் ஆர்பிஐயின் தன்னாட்சிக்கும் கடந்த சிலமாதங்களாக நடைபெற்றுவந்த மோதலின் உச்ச நிகழ்வாகும், வட்டி விகிதம், வாராக்கடன் பிரச்சனை, நீரவ் மோடியின் பஞ்சாயத்து என பல்வேறு காரணங்களால் ஆர்பிஐயும் மத்திய அரசும் முட்டிக்கொண்டன. மோதல் இப்பொழுது முற்றிப்போய் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித்படேலின் ராஜினாமாவில் வந்துநிற்கிறது. இந்த மோதல் வெளியுலகத்துக்கு தெரிந்தது என்னவோ ஆர்பிஐயின் துணை ஆளுநர் ஆச்சார்யா ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசு தேவையில்லாமல் ஆர்பிஐயின் தன்னாட்சியில் தலையிடுகிறது என குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கீழ்கண்ட காரணங்களுக்காக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மோதிக்கொண்டன.

வட்டி விகிதத்தில் மோதல்:

இதுதான் ஆரம்பமே, மத்திய அரசும் ஆர்பிஐயும் முட்டிக்கொண்ட முக்கிய காரணமே இந்த வட்டி விகிதம் தான், மத்திய அரசோ வட்டி விகிதத்தை குறைக்க வலியுறுத்தியது ஆர்பிஐயோ வட்டி விகிதத்தை ஏற்றுவதில் குறியாக இருந்தது, மத்திய அரசு எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் வட்டி விகிதத்தை குறைக்காமல் ஆர்பிஐ செயல்பட்டு  கொண்டிருந்தது, இதுவே முதல் காரணமாக அமைந்தது.

செயற்படா சொத்துக்களும் அதான் விதிமுறைகளும்:

பிப்ரவரி மாதம் ஆர்பிஐ எல்லா வங்கிகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பியது, அறிக்கையில் தெரிவித்தது என்னவென்றால், 180 நாட்கள் கால வரைவு அளிக்கபட்டது, அதாவது 180 நாட்களுக்குள்  கடன் வாங்கிய வங்கியிலிருந்து எந்த பரிமாற்றமுமில்லை என்றால் அது செயற்படா சொத்துகள் கணக்கில் சேர்க்கப்படும், இதுவே மத்திய அரசுக்கும் ஆர்பிஐக்கும் இரண்டாவது மோதல் உருவாக காரணமாக அமைந்தது.

தற்பொழுது உள்ளநிலையில் 21 வங்கியில் 11 வங்கி ஆர்பிஐயின் கண்காணிப்பில் உள்ளது. தேனா வங்கி, அலஹாபாத் வங்கி என குறிப்பிட்ட பிரபல வங்கிகள் இதில் உள்ளது.

நீரவ் மோடி என்னும் தலைவலி:

நீரவ் மோடி என்னும் தலைவலி ஆர்பிஐயிடம் தொற்றிக்கொண்டது, சுமார் 14000 கோடி ரூபாய் ஏமாற்றி நாட்டை விட்டு ஓட்டம் எடுத்த நீரவ் மோடிதான் ஆர்பிஐக்கும் மத்திய அரசுக்கும் மோதலுக்கான மூன்றாம் காரணம் ஆனார்.  நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த  பித்தாலாட்டுதனம் வெளிவந்தவுடன், மத்திய மோடி அரசு ஆர்பிஐ மீது மீண்டும் கோபத்தை கொட்டி தீர்த்தது, வங்கி கடன் வழங்கும் முறையை கட்டுப்படுத்த ஆர்பிஐக்கு வலியுறுத்தியது ஆனால் ஆர்பிஐயோ சரியான அதிகாரம் எங்களுக்கு வழங்க படவில்லை என  காரணம் சொன்னது. இந்த பிரச்சனையின் பொழுது தான் உர்ஜித் படேல் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூற அமபித்தார்.

பணம் ஒழுங்குமுறையால் வந்த சோதனை:

ஆர்பிஐயும் மத்திய அரசும் மறுபடியும் மோதிக்கொண்டது பண ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்ததுதான். பிஆர்பி எனப்படும்  பேமெண்ட்ஸ் ரெகுலேட்டரி போர்டு நாட்டின் பண பரிமாற்றத்தை கண்காணிக்கும் ஆணையத்தை மத்திய அரசு ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருந்து தன்னாட்சி அமைப்பாக செயல்படுத்த முயற்சி செய்தது. இது ஆர்பிஐயின் தலைமைக்கு மீண்டும் காட்டத்தை உண்டாக்கியது. ஆர்பிஐயும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து குரல்கொடுக்க தொடங்கியது, நாடு முழுவதும் ஒரு விவாத  பொருளாக மாறியது ஆர்பிஐ – மத்திய அரசின் மோதல்.

நச்சிகேட் மோரின் வெளியேற்றம்:

ஆர்பிஐயின் செயற்குழுவில் இடம்பெற்றிருந்த நச்சிகேட் மோர் யாரும் எதிர்பாக்காத முறையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், இவரது நீக்கத்துக்கு மத்திய அரசுடன் அவர் கொண்ட கருத்து வேறுபாடுகள்தான் என கூறப்படுகிறது.

ஆர்பிஐ துணை ஆளுநரின் வெளிப்படையான தாக்குதல்:

ஆர்பிஐயின் துணை ஆளுநர் சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ஆர்பிஐயின் தன்னாட்சி கேள்விக்குறி ஆகியுள்ளதாக பேசினார். இது மத்திய அரசின் தலைமை ரசிக்கவில்லை. தன்னாட்சியை ஆர்பிஐ இழப்பதால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஆச்சார்யா அவரது உரையில் குறிப்பிட்டார்.

டிமானிட்டைசேஷன் என்னும் பேய்:

நவம்பர் 8 2016 பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு குறைத்தல் நாட்டுக்கு உரை ஆற்றுவதற்கு முன் ஆர்பிஐயின் கவர்னரிடம் கலந்து உரையாடினார். அந்த சந்திப்பில் ஆர்பிஐ ஆளுநரால் குறிப்பிட்டது சில விஷயங்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தன, அதில் ஆர்பிஐ ஆளுநர் டிமானிட்டைசேஷன் முயற்சியை கைவிடுமாறு பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு 6 காரணங்கள் தெரிவிக்க பட்டதாகவும் சொல்ல படுகிறது.

 

3.6 லட்சம் கேட்டது மத்திய அரசு :

மேல் குறிப்பிட்ட அனைத்துக்கும் மேலாக ஆர்பிஐயிடம்  சுமார் 3.6 லட்சம் கோடி இருப்பு தொகையை மத்திய அரசு கேட்டு அதை கொடுக்காமல் ஆர்பிஐ தவிர்த்தது மோதலின் உச்சம் என சொல்லலாம். 9.59 லட்சம் கோடி இருப்பில் சுமார் 3.6 லட்சம் கோடி அதாவது இருப்பில்  மூன்றில் ஒரு பங்கு இருப்பு தொகையை கேட்டது மத்திய அரசு. இதை ஆர்பிஐயின் தலைமை அறவே வெறுத்தது  ஆர்பிஐ .

மத்திய அரசின் திட்டங்களுக்கான செலவுகளை சரி செய்ய ஆர்பிஐயின் இருப்பில் ஏன் கை வைக்க வேண்டும் என்பதுதான் ஆர்பிஐயின் கேள்வியாக இருந்தது. தன்னாட்சி முதல் எதிர்மறை  கருத்துகளால் மத்திய அரசுக்கும் ஆர்பிஐக்குமான இந்த தகராறு இந்தியா வீதிகளுக்கு வந்து இருப்பதே நிதர்சனமான உண்மை. எது எப்படியோ வட்டியும் குறையவில்லை ஆர்பிஐயும் முடிவை மாத்திக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆளுநர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this