குறைந்து வரும் யானைகள் !

குறைந்து வரும் யானைகள் !

2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பனிரெண்டுக்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் தாக்கி இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உயிரிழந்துள்ளது. இதில் ஓடிச்சாவில் தென்கனல் மாவட்டத்தில் இறந்த எழு யானைகளும் அடங்கும்.

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் நடக்கும் மோதல்கள் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையளிக்கிறது

வருடத்திற்கு 50 யானைகள்

ஆய்வின்படி இந்தியாவில் 2009-ஆம் வருடம் முதல் நவம்பர் 2017 வரை வருடத்திற்கு சராசரியாக 50 யானைகள் வரை மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்டகாலத்தில் மட்டும் 461 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது.

ஆய்வை சற்று உற்றுநோக்கினால் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலப்பகுதிகளில் யானைகள் அதிகமாக மின்சாரம் தாக்கி  இறந்துள்ளது-ஓடிசாவில் 90 யானைகள், அசாமில் 70 யானைகள், மேற்கு வங்காளத்தில் 48 மற்றும் சத்திஸ்கரில் 23 யானைகள் இறந்துள்ளன.

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் (MOEFCC) அமைச்சக தகவல்படி கர்நாடக மாநிலத்தில் அதிகமாக யானைகள் வாழ்ந்து வருகின்றன, அங்கேயேதான் அதிகமாக 106 யானைகள் மின்சாரம்தாக்கி இறந்து உள்ளது. அதேபோல் 17 யானைகள் கேரளவில் இறந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 50 யானைகள் இறந்துள்ளது.

இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) பிரதிநிதிகள் MOEFCC’s உடன் சேர்ந்து யானை தாழ்வாரங்களின் பாதுகாப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார்கள்வனத்துறையும் மற்ற சமூக அரகட்டளைகளும் மின்சார துறையும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் மின்சார கம்பிகளை கண்காணிக்க வேண்டும்.

 

தொகுப்பு – பூபதி மணி

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this