கொஞ்சம் காபி; கொஞ்சம் அனுபவம் !

கொஞ்சம் காபி; கொஞ்சம் அனுபவம் !

கைகழுவ பெட்ரோல் பம்ப், உட்கார கார் டயரால் ஆன இருக்கைகள், சைக்கிள் டயர்களுடன் பொருத்தப்பட்ட மின் விளக்குகள், அலங்கரிக்கும் நட், போல்ட், கயிறு போன்ற உதிரி பாகங்கள், குறிப்பாகக் கன்டெய்னரால் அமைக்கப்பட்ட கிச்சன், உணவகம் என ‘கேரியேஜாக’ காட்சியளிக்கிறது ‘கன்டெய்னர் கஃபே’. வண்ண ஓவியங்களுடன் முழுவதும் வித்தியாசமான தோற்றத்துடன், இவ்வுணவகம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது.

“நான் படிச்சது ஹோட்டல் மேனேஜ்மென்ட். காபி ஷாப் திறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பெரும்பாலும், காபி ஷாப் என்பது வந்து காபி குடித்துவிட்டுப் போவதற்கு மட்டும் இல்லைதானே. பேசுவதற்கு, உரையாடுவதற்கு, டென்ஷனைக் குறைப்பதற்கு எனச் சூழல் அமைத்துத் தரும் இடமாக உள்ளது. அப்படியிருக்கையில், சாதாரணமாக இருப்பதைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நம் ஊரில் இல்லையென்றாலும் வெளிநாடுகளிலெல்லாம் கன்டெய்னரில் உணவகங்கள் இருப்பதைப் பார்த்துள்ளேன். அதை, இங்கு முயற்சி செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில்தான் கன்டெய்னரில் அமைத்தோம். ஆரம்பத்தில், கன்டெய்னர் பொருத்துவது பெரிய சவாலாக இருந்தது. பிறகு, முழுக்க முழுக்க ஒரு மாற்று அனுபவத்துக்காகவே அதைச் சார்ந்த பொருள்கள், ஓவியங்கள் வடிவமைத்துள்ளோம். ஆரம்பித்து ஒரு வருடமாகிறது’ என்கிறார் கன்டெய்னர் கஃபே உரிமையாளர் ராகுல்.

`காபி, கோல்டு காபி, மில்க் ஷேக் கிரானிடேஸ் வகைகள், ஆலியோ ஸ்பெகாட்டி, ஸ்மூத்தி, பர்கர், சாலட் என இத்தாலிய உணவுமுறைகளை விதவிதமாக வழங்குகிறோம். அனைத்தும் உடனுக்குடனே செய்து தருகிறோம். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்புள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்களின் விருப்பத்துக்குரிய இடமாக உள்ளது. என் சொந்த ஊரில் இப்படி ஓர் உணவகம் அமைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் ராகுல்.

அயற்சியான நெடுஞ்சாலை பயணம், வேலைகளுக்கு மத்தியில் வித்தியாசமான அனுபவத்தை விரும்புபவர்களுக்கு ‘கன்டெய்னர் கஃபே’ சிறந்த தேர்வாக இருக்கும்.

கொஞ்சம் காபி; கொஞ்சம் அனுபவம் !

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this