மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்  அளவுகோலில்  5.8 ஆகப் பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாப்புவா மாகாணத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 55 கிலோ மீட்டராக உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி தோற்றுவிக்கும் சக்தி இல்லை. எனவே, மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலடி அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்து அதன் லாவா குழம்பு கடல் நீருடன் கலந்ததில் வெளிப்பட்ட ஆற்றலில் சுனாமி ராட்சத அலைகள் தாக்கியது.

இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this