99 சீனப் பொருள்கள் மீது “மிகை இறக்குமதி தடுப்பு வரி’

99 சீனப் பொருள்கள் மீது “மிகை இறக்குமதி தடுப்பு வரி’

உள்நாட்டு உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் 99 சீனப் பொருள்கள் மீது “மிகை இறக்குமதி தடுப்பு வரி’யை மத்திய வர்த்தக அமைச்சகம் விதித்துள்ளது.

இது குறித்து, மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் சி.ஆர். செளதரி திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், இயந்திர பாகங்கள், மருந்துகள், ரப்பர், இரும்புப் பொருள்கள், நூல், நூலிழை உள்பட 99 பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பானது கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது பொருள்களை சீனா மலிவான விலையில் அபரிமிதமாக இறக்குமதி செய்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, உலக வர்த்தக அமைப்பு விதிகளின் அடிப்படையில், இந்த வரியை மத்திய வர்த்தக அமைச்சகம் விதித்துள்ளது. மேலும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், ஏற்றுமதியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வேளாண்பொருள்கள், கால்நடைத் தீவனங்கள், எண்ணெய் வித்துகள், பால் மற்றும் பால் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை மூலம் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this