ஐந்து மாநில தேர்தலும் பாஜகவின் 2019ன் வெற்றிவாய்ப்பும்

ஐந்து மாநில தேர்தலும் பாஜகவின் 2019ன் வெற்றிவாய்ப்பும்

ஐந்து மாநில தேர்தலும் பாஜகவின் 2019ன் வெற்றிவாய்ப்பும்

அடுத்த நான்கு மாதங்களில் இந்தியா

2014 ல் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அசுர வளர்ச்சி இந்திய முழுவதும் எதிரொலித்த காலகட்டத்தில், ஒரு முற்றுப்புள்ளியை ஏற்படுத்திய ஐந்து மாநில தேர்தல் தோல்வியையும் அதன் தாக்கத்தையும் கீழே காண்போம்.

ஏன் இந்த தேர்தல் முக்கியம்

நடந்த 5 மாநில தேர்தல்களில் 3 பாஜகவின் கோட்டை “ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம்”. இவற்றில் மொத்தம் “65” லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் “60” தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, இன்று தன் பிடியை விட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் தொடர்ந்து 15  வருட ஆட்சியின் எதிர்ப்பு மனப்பான்மையே. ராஜஸ்தானை பொறுத்தவரை “1990”களில் இருந்து இன்று வரை ஒருகட்சி இருமுறை தொடர்ந்து ஆட்சி செய்ததே இல்லை.

பாஜகவின் “இரும்புக்கோட்டை” என அழைக்கப்படும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் உத்திரபிரதேசத்தில் தன் செல்வாக்கு சற்று சரிந்துள்ளதை பாஜக இன்று உணர்ந்துள்ளது.

மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஒட்டு வங்கியில் பெரிய மற்றம் இல்லாவிட்டாலும், சீட்களில் கணிசமான அளவு குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் “மகா கூட்டணி” மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் மக்களின் அதிருப்தியில் வெளிப்பாடே இதனை காட்டுகிறது.

2019 பாஜகவின் நிலைமை

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின்  “மகா கூட்டணி” ஈடுபடுவது மிகவும் சிரமமாக கருதப்படுகிறது. ஏனெனில் மாநிலக்கட்சிகளின் கூட்டணி அண்டை மாநிலத்தில் அதன் தாக்கத்தை ஏற்படுத்துவது முடியாத காரியம். உதாரணமாக சித்தராமையா தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதும், சந்திரபாபுநாயுடு தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்வதும், நன்மையைவிட தீமையையே கொண்டு சேர்க்கும்.

வெற்றி பெற்றாலும் ஸ்திரமில்லா தலைமை

15 வருட அதிருப்தியை  பயன்படுத்தி கூட காங்கிரசால் ஒரு நல்ல வெற்றியை பெற முடியவில்லை. தெலுங்கானாவில் மஹாகூட்டணி எடுபடவில்லை, காரணம் தலைமையின்மை.

எதிர்க்கட்சியின் ஒரு மக்கள் மனம் கவர்ந்த தலைமையை முன்னிறுத்தும்வரை, பாஜகவை வீழ்த்துவது மிக கடினமே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மத்தியஅரசின் தற்போதைய குறைகள்

“பணமதிப்பிழப்பை” பெரும்குறையாக கூறினால் அதன்பின் நடந்த கோவா, கர்நாடக மற்றும் உ.பி தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை. ஆகவே இத்தேர்தலில் தோல்வி , நடுத்தர மக்களின் கோபமாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமாக பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம், மாநில பிரச்சனைகளில் மௌனம், பொருளாதார மந்தநிலையே காரணம்.

modi bjp symbol

பாஜகவிடம் எதிர்பார்க்கவேண்டியவை

வரும் 4 மாதங்களில் சில அறிவிப்பை மக்கள் கேட்க வாய்ப்புள்ளது.

1 . GST யில் பெட்ரோல்

அவசர சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் GST யின் கீழ் கொண்டுவரப்படும். இதன்முலம் பெட்ரோல் 42 ரூபாய்க்கும், டீசல் 38 ரூபாய்க்கும் கிடைக்கும். ஆனால் இது கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே.

2 . விவசாயக்கடன் தள்ளுபடி

விவசாய கடன் தள்ளுபடி பரவலாக  விவசாயிகளிடம் எதிர்பார்க்கப்படும் ஓன்று. ஏனேனில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே வருவது வேதனைக்குரிய விஷயமாகும். விளைச்சலுக்கு போதுமான பலன் கிடைக்காதபோது அவர்கள் அரசாங்கத்தைத்தான் எதிர்பார்க்கவேண்டியுள்ளது.

3 . ராமர்கோவில்

ராமர் கோவில் கட்டுவது அவர்களின் மிகமுக்கியமான கொள்கைகளில் ஓன்று.  இது மத்திய மாநிலங்களில் அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்கும். ஆனால் இது பிற மாநிலங்களில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

4. நல்ல திட்டங்கள் பேசப்படவேண்டும்

தேர்தலின் போது தனிமனித தாக்குதல் மற்றும் குடும்ப அரசியலை விட்டுவிட்டு தனது சாதனைகளை மட்டும் மக்களிடம் கொண்டு சென்றாலே போதும். ஆனால் பாஜகவில் வெறுப்பு அரசியல் ஒவ்வொரு   மேடை பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது. நல்ல திட்டங்க ளோ   சாதனைக ளோ பேசப்படவில்லை.

5. மதச்சாய அரசியல் தேவையில்லை

மதச்சாய அரசியல் மக்களிடம் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். ஆனால் பாஜகவில் மிக மோசமாக உள்ளது. மோடி பிரதமராக போட்டியிடும்போது குஜராத்தில் அவரது சாதனைகளே மக்களை சென்றடைந்து வெற்றிபெற வைத்ததே தவிர மதச்சாய பிரச்சாரமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை மக்களின் எண்ணப்போக்கை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எழுத்தாக்கம்: விக்னேஸ்வரன்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this