சாம்பியன் பட்டம் வென்ற சென்னை

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்தில் மினர்வா பஞ்சாப் அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் மினர்வா பஞ்சாப் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சென்னை சிட்டி அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்த போதிலும் முதல் பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

2-வது பாதி ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை மான்ஸி கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது. மான்ஸி இந்தத் தொடரில் அடித்த 21-வது கோலாக இது அமைந்தது.

69-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி தனது 2-வது கோலை அடித்தது. கார்னரில் இருந்து சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் உதைத்த பந்தை கவுரவ் போரா கச்சிதமாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 2-1 என முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் சென்னை சிட்டி அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.

93-வது நிமிடத்தில் சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து உதைத்த பந்தை கவுரவ் போரா கோலாக மாற்ற சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை சிட்டி அணிக் 13-கு இதுவது வெற்றியாக அமைந்தது. 20 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சிட்டி அணி 4 டிரா, 3 தோல்விகளுடன் 43 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த சாம்பியன் பட்டத்தை சென்னை என்ற பெயருக்காக மட்டும் கொண்டாடினால் போதாது. இது உண்மையிலேயே சென்னையின், தமிழகத்தின் கால்பந்துக்குக் கிடைத்த வெற்றி. மற்ற விளையாட்டு அணிகளைப்போல் பெயரளவில் மட்டும் ஊர்ப் பெயரைச் சுமக்காமல், 17 தமிழக வீரர்களை ஒப்பந்தம் செய்து, உண்மையிலேயே தமிழக அணியாகவே இருக்கிறது சென்னை சிட்டி.

தமிழகத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சாம்பியன்கள் ஆக்கியதுதான் சென்னை சிட்டி அணியின் மிகப்பெரிய வெற்றி.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this