சென்னை முதலிடம் #Infographics

சென்னை முதலிடம் #Infographics

தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசு சமூக நலத்துறை, குழந்தைகள் நலனுக்கான இந்தியக் கவுன்சில் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதிப்பதற்கான மாநில அளவிலான கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் சமூக நலத்துறையின் ஆணையர் வி.அமுதவள்ளி குழந்தைகள் திருமணம் தடுத்தல் தொடர்பாக ஆவண கையேட்டை வெளியிட்டு.பேசும்போது, ‘‘18 வயதுக்கு உட்பட்ட பெண்களை யும் 21 வயதுக்கு உட்பட்ட ஆண் களையும் திருமணம் செய்வது குழந்தை திருமண சட்டத்துக்கு எதிரானது. இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2017-ல் மட்டும் தமிழகத்தில் 1,636 திருமணங்கள் தடுத்து நிறுத் தப்பட்டுள்ளன’’ என்றார்.

child marriage online tamil news

 

கூட்டத்தில் மாநில குழந்தை கள் உரிமை பாதுகாப்பு ஆணை யத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா கூறியதாவது:

2011-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில், முதலிடத்தில் உத்தரபிரதேசமும் 2-ம் இடத்தில் பிஹார், 3-ம் இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் மட்டும் மொத்தம் 62,500 திருமணங்கள் நடந்துள்ளன. தமிழக அளவில் சென்னை முதலி டத்தில் இருக்கிறது. சென்னையில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரம். கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் 5,480 குழந்தை திருமணம் நடந் துள்ளன. சென்னையில் புதிய தாக குடியமர்த்தப்பட்டுள்ள இடங் களில்தான் திருமணம் அதிகளவில் நடந்து இருக்கின்றன.

கோவையில் 3,025 பேருக்கும் மதுரையில் 2,840 பேருக்கும் குழந்தை திருமணம் நடத்துள்ள தாக பதிவாகியுள்ளது. குழந்தை திருமணங்களால் சிறிய வயதில் தாயாகும் பெண்ணுக்கும் அவ ருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்ரீதியான பல்வேறு பிரச் சினைகளும் ஊட்டசத்து பிரச்சினை யும் ஏற்படுகின்றன. குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் என்பது மதம், ஜாதிகளுக்கு அப்பாற்பட் டது என்று கூறினார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this