சென்னை அணி த்ரில் வெற்றி

சென்னை அணி த்ரில் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்த கொண்டிருக்க, மறுமுனையில் கிறிஸ் லின் அதிரடி காட்டினார். 51 பந்திகளில் 82 ரன்கள் விளாசிய கிறிஸ் லின் இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களைச் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய இம்ரான் தாஹிர் 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் வாட்சன் (6), டு பிளெசிஸ் (24), அம்பதி ராயுடு (5), ஜாதவ் (20), தோனி (16) ஆகியோர் விரைவில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய ரெய்னா அரைசதம் கடந்தார்.

கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. ஹேரி கர்னி வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததால், பதற்றம் குறைந்தது.

இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this