ம.பி. விவசாயிகளை ஏமாற்றிய காங்கிரஸ்

ம.பி. விவசாயிகளை ஏமாற்றிய காங்கிரஸ்

விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக கூறி ஓட்டு வாங்கி, மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடித்த காங்., அரசு, தற்போது விவசாயிகள் கணக்கில் ரூ.24,000 க்கு பதிவாக ரூ.13 மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,யில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது காங்., கூறி இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, விவசாயிகளின் ரூ.50,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறியது. லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வருவதற்கு முன், விவசாய கடன் தள்ளுபடி பணிகளை முடிக்க 3 நிறங்களில் விண்ணப்ப படிவங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

பிப்ரவரி இறுதிக்குள் கடன்தொகை அனைத்தும் தள்ளுபடி ஆகி விடும் என விவசாயிகள் நம்பி கொண்டிருந்தனர். விவசாயிகள் சிலர் தங்களின் கடன் தொகையான ரூ.24,000 க்கு பதில் வெறும் ரூ.13 மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.23,815 கடன் அப்படியே இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
விவசாய கடனுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், பிப்ரவரி 5 ம் தேதி துவங்கி, பிப்ரவரி 22 ம் தேதிக்குள் அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் எனவும், இதனால் சுமார் 55 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் ம.பி., அரசு கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this