இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த தொடருக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டன.

இந்திய அணி தேர்வு செய்வதற்காக மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தேர்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா. தினேஷ் கார்த்திக்

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this