தோனி காயம்?

தோனி  காயம்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதிக்க பயிற்சியில் ஈடுபட்ட போது தோனி வலது கையில் காயம் ஏற்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தோனி இடம் பெற்றுள்ளார். முதல் போட்டிக்காக நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

இவருக்கு உதவி பயிற்சியாளர் ராகவேந்திரா “த்ரோ டவுன்” முறையில் பந்தை வீசினார். அப்போது வேகமாக வந்த பந்து தோனியின் வலது முன்கையில் தாக்கியது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதன் பின் பேட்டிங் பயிற்சியில் தோனி ஈடுபடவில்லை.

தோனியின் காயம் எந்தளவுக்கு உள்ளது என முழுதாக தெரியவில்லை. இதனால் இவர் களமிறங்குவது குறித்து நாளை தான் உறுதியாக தெரியும். ஒருவேளை தோனி விளையாடவில்லை எனில் ரிஷாப் பன்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this