காங்கோவில் எபோலா

காங்கோவில் எபோலா

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவாகும்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ”காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் மூலம் கிட்டதட்ட 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய நகரகளுக்கு எபோலா நோய் பரவலையும் தடுத்துளோம் என்றும், தொடர்ந்து எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது.

இதில் எபாலோ வைரஸ் பாதிப்பால் 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 11,000 பேர் உயிரிழந்தனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this