காங் ஆட்சி – விவசாயிகள் ஆட்சியாளர்கள்

காங் ஆட்சி – விவசாயிகள் ஆட்சியாளர்கள்

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தான் நாட்டின் ஆட்சியாளர்கள் என காங்., தலைவர் ராகுல் பேசி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் விவசாயிகள் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், விவசாயிகள் தான் நாட்டின் மிகப் பெரிய சொத்து. வரும் லோக்சபா தேர்தலில் விவசாயிகளின் குரல் எதிரொலிக்கும். விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அவர்களின் வாழ்க்கை பின்னோக்கி இழுக்கிறார். ரபேல் விவகாரத்தில் பார்லி., விசாரணை தேவை.

காங்., ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தான் ஆட்சியாளர்கள். அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.
2019 ல் காங்., நிச்சயம் வெற்றி பெறும். அப்போது விவசாயிகள் தான் ஆட்சியாளர்கள். மத்திய அரசு சிபிஐ இயக்குனரை நள்ளிரவில் விலக்கியது.

ஆனால் சுப்ரீம் கோர்ட் அவரை மீண்டும் பணியமர்த்தி உள்ளது. லோக்சபாவிற்கு பிரதமர் மோடி கொஞ்ச நேரம் கூட வரவில்லை. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா மட்டுமே இரண்டரை மணி நேரம் பேசுகிறார். நாங்கள் அவரின் ஒவ்வொரு பொய்யையும் வெளிப்படுத்தி விட்டோம். எங்களின் நேரடி கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை என்றார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this