தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும்

தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும்

தேசிய தோட்டக்கலை வாரியம், 2017-18 – ம் ஆண்டின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பின்படி, தேங்காய் 20.79 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 162.28 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 81 சதவிகிதம் பங்களிக்கின்றன.

உள்நாட்டுச் சந்தையில் வரும் பண்டிகை காலங்கள் மற்றும் கஜா புயலின் தாக்கமும் தேங்காயின் தேவைகளை அதிகரிக்கச் செய்யும் எனக் கருதப்படுகிறது. கொப்பரை வரத்தானது, உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், கோபிச் செட்டிபாளையம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. மேலும், கர்நாடக தேங்காய் வரத்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை விலை மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை 15 ரூபாய் முதல் 17 ரூபாய் வரை இருக்கும். நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு 105 ரூபாய் ஆக இருக்கும் என அறியப்படுகிறது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this