இந்தியாவில் அசுர வளர்ச்சியடையும் யூடியூப்

இந்தியாவில் அசுர வளர்ச்சியடையும் யூடியூப்

யூடியூப் வலைதளம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசன் தெரிவித்துள்ளார்

சமூக வலைதளங்களில் பிரதானமான ஒன்று யூடியூப் . இந்தத் தளம் வீடியோ பதிவுகள் பார்க்கவும் பதிவிடவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தளத்தில் வீடியோ பதிவிடுவதன் மூலம் வருவாய் ஈட்டமுடியும் என்பதால் இது ஒரு வருமானம் ஈட்டும் தளமாகவும் இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் யூடியூப் வலைதளம் வேகமாக வளர்ந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஒ சுசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இந்தியா தான் தற்போது யூடியூப் தளத்தின் மிகப் பெரிய சந்தை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு இந்தியாவிலிருந்து 265 மில்லியன் பேர் வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் யூடியூப் தளம் பொழுது போக்கு, அரசியல் மற்றும் பிற துறை தகவல்களை எளிதில் தருவதால் அதை அதிக மக்கள் காண்கின்றனர். அதேபோல இந்தியாவில் கடந்த ஓராண்டில் மொபைல் போனில் யூடியூப் தளத்தை பார்ப்பது 85% அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் 1,200 பக்கங்கள் மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து செயல்பட்டு வருகின்றன. இதுகடந்த 5 ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைவிட அதிகமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this