ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசியை ஒப்படைத்தது இந்தியாவுக்கு உதவி செய்து இருக்கிறதா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசியை ஒப்படைத்தது இந்தியாவுக்கு உதவி செய்து இருக்கிறதா?

மத்திய அரசின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரி “தி பிரிண்ட்” என்னும் ஆங்கில பத்திரிகைக்கு சொல்லியிருப்பது என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் ஐக்கிய எமிரேட்ஸ் நாட்டின் இளவரசியும் துபாய் நாட்டின் அரசர் ரஷீத் இன் மகளுமான லதிஃபாவை இந்தியா துபாய்யிடம் ஒப்படைத்தது.

இப்பொழுது இந்தியாவுக்கு 3600 கோடி மதிப்பிலான அகஸ்டா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மைக்கெல் இந்தியா கொண்டுவர உதவி செய்துஇருக்கிறது என்பதுதான்.

முகமது பின் சல்மான் மோடி சந்திப்பு – G20 அர்ஜென்டீனா 2018

சிபிஐ வெளிப்படையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் வழிகாட்டுதலில்தான் மைக்கெல் இந்தியா கொண்டுவரப்பட்டார் என ஒப்புக்கொண்டு கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டு இருக்கிறது, இதில் பரவலாக பேச படும் விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ஆலோசனைப்படிதான், துபாயில் இருந்து அந்நாட்டு மன்னரும் தந்தையுமான ரஷீதின் சித்ரவதையால் தப்பி வந்த துபாய் நாட்டு இளவரசி லதிஃபா கோவா கடல் பகுதியில் சுமார் 50 கிமீ தொலைவில் கைது செய்யப்பட்டு திரும்பவும் துபாய் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மற்றுமொரு நிகழ்வை இங்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கடந்த வாரம் G20 மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றிருந்த பிரதமர் மோடி சவுதிஅரேபியா மன்னருடனான சந்திப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இருந்தார், இது உலக நாடுகள் ஒருமித்த குரலில் சவூதி அரசருக்கு கண்டன குரல் எழுப்பிகொண்டு இருக்கும் நிலையில் இந்த சந்திப்பும், சந்திப்புக்கான கூடுதல் முக்கியத்துவமும் வெளியுறவு வல்லுநர்களால் உற்றுநோக்கப்படுகிறது.

வாஷிங்டன் போஸ்டில் கட்டுரை எழுதி கொண்டிருந்த சவூதி நாட்டை சேர்ந்த ஜமால் துருக்கி நாட்டில் கொடுரமாக கொல்லப்பட்டதற்கு சவுதியின் மழுப்பலான பதில்களும் அமெரிக்காவின் எச்சரிக்கையும் குறிப்பிடத்தக்கது.

Image result for princess latifa uae

BBC TV grab – Courtesy BBC- இளவரசி லதிஃபா

இதற்கு நடுவே லதிஃபா துபாயில் இருந்து தப்பி வந்தபொழுது என்ன நடந்தது என சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் அலசி கொண்டிருக்கையில் பிபிசி நிறுவனம் விரிவாக செய்தி வெளியிட்டு உலகநாடுகளின் கவனத்தை திரும்பி பார்க்க செய்தது. லதிஃபா துபாயில் இருந்து தப்பி செல்ல பலநாட்களாக முயற்சி செய்து வந்திருக்கிறார். இறுதியாக, பிரெஞ்சு நாட்டை சேர்ந்த முன்னாள் உளவாளி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த வேறு சிலர்களுடன் துபாயில் இருந்து படகு மூலம் தப்பி வந்திருக்கிறார். தப்பி வந்த இளவரசி இந்தியாவில் பாதுகாப்பாக தங்கவைக்க படாமல் பிரதமர் அலுவலக அறிவுறுத்தலின்படி மீண்டும் துபாய்க்கு அனுப்பப்பட்டார், இந்த சம்பவத்துக்கு பிறகு இளவரசி என்ன ஆனார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து இதை வழக்காக கையில் எடுத்திருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் இந்தியா மற்றும் ஐக்கிய எமிரேட்ஸிடம் விளக்கம் கேட்க ஐக்கிய அமைப்பிடம் கோரிக்கை வைத்து உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், சரியாக லதிஃபா துபாய்யிடம் ஒப்படைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து துபாய் நாட்டின் வெளியுறவுத்துறை சுமார் 75 பில்லியன் முதலீட்டை இந்தியாவில் செய்ய போவதாக அறிவித்தது. இப்பொழுது அகஸ்டா வெஸ்ட்லண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டின் மைக்கேலை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

அஜித் தோவல் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என கூறப்படும் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின் துணிச்சலான நடவடிக்கையும், பிரதமர் மோடியின் சமயோஜித செயலில் அகஸ்டா ஊழலில் தொடர்புடைய மொத்த கும்பலும் அரண்டு போயிருக்கிறது. மற்ற நாடுகள், இந்தியாவின் கோரிக்கையை இன்னும் விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி, நீரவ் மோடி போன்றவர்களின் வழக்குகளில் பரிசீலித்து வருகின்ற நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கிறிஸ்டின் மைக்கேலை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது சர்வதேச வெளியுறவு வல்லுநர்களால் உற்றுப்பார்க்கபடுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் மிகவிரைவில் நடக்க இருக்கும் நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களில் மிகவும் பேசப்பட்ட அகஸ்டா ஊழலில் முக்கியப்புள்ளி சிக்கி இருப்பது காங்கிரசை கலகம் அடைய செய்திருக்கிறது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this