சென்னையில் சிஎஸ்கே ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை

சென்னையில் சிஎஸ்கே ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை

12-வது ஐபிஎல் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டம் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை 16-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை காலை 11.30 மணிக்கு தொடங்கும். டிக்கெட்டுகள் மொத்தம் விற்பனை ஆகும் வரை இது தொடரும். சென்னை அணியின் உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்பனையை புக் மை ஷோ.காம் நிறுவனம் கையாள்கிறது.

டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனையும் 11.30 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500   விலையில் விற்பனையாகிறது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this