கமல்ஹாசன் திட்டவட்டம்!

கமல்ஹாசன் திட்டவட்டம்!

கோவை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “இரண்டு நாள்கள் பொள்ளாச்சி மண்டலத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எங்கள் கட்சி கட்டமைப்பு ஏற்பாடுகளை கண்டு மகிழ்ந்தேன். செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். தி.மு.க-வுடன் கூட்டணி  கிடையாது என்ற தகவல் உண்மைதான். மக்களுக்கு நல்லதை பறிமாற முற்பட்டு இருக்கிறோம். கையைச் சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அ.தி.மு.க-வை தனியாகச் சொல்லவில்லை என எண்ண வேண்டாம். ஆரம்பத்திலிருந்தே அந்தக் கட்சியை எதிர்த்து வருகிறோம். அ.தி.மு.க-வுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

இதையடுத்து அ.ம.மு.க, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது, “கை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்தக் கேள்விக்கு இடமில்லை” என்று அ.ம.மு.கவுடனும் கூட்டணி கிடையாது என சூசகமாகத் தெரிவித்தார்.

மேலும், “எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் எண்ணம். எங்கள் கை கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்” என்றார். ரஜினி அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு குறித்த கேள்விக்கு, ரஜினி தனது இல்ல கல்யாணத்துக்கு அரசியல் கட்சியினரை அழைக்கச் சென்றிருக்கிறார். இந்து திருமண முறையைப் பற்றி தி.மு.க-வினர் பேசுவது புதிதாகச் செய்வதல்ல. அது எனக்கு பேரதிர்ச்சியையும் தரவில்லை. அது அவர்கள் கருத்து. இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசியிருக்கத் தேவையில்லை என்பது என் கருத்து” என்றார் கமல்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this