18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் ரெடி

18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் ரெடி

லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மையம் போட்டியிடும் என இன்று அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிட கமலின் மக்கள் நீதி மையத்திற்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம்.

மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000 க்கு  டிடி எடுத்து அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை சென்னை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம். www.maiam,.com என்ற இணையதளத்திலும், மையம் கனெக்ட் என்ற ஆப் மூலம் விருப்ப மனுக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளிக்க மார்ச் 16 ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this