33 வருடங்களுக்குப் பிறகு மேஸ்ட்ரோவுடன்

33 வருடங்களுக்குப் பிறகு மேஸ்ட்ரோவுடன்

இரண்டு நாள்கள் பிரமாண்ட விழாவாக சென்னையில் நடைபெற்ற `இளையராஜா 75′ நிகழ்ச்சியின் முதல்நாள், ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழவைத்தது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகின.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் `இளையராஜா 75′ நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாள், பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். முதல்நாள் நிகழ்ச்சியின்  உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். அப்போது பேசிய இளையராஜா, “ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், “உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என்று நெகிழ்ந்தார்.

latest tamil news, illayaraja75, ar arhman

“ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்’’ என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கஸ்தூரி கோரிக்கை வைக்க, சிரித்துக்கொண்டே அதை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. `மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா தனது வசீகரக் குரலில் பாட, அரங்கமே அதிர்ந்தது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டை வாசிக்கத் தொடங்க, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

இந்த நிகழ்வைச் சம்பந்தப்படுத்தி பதின் பருவத்திலிருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் நோட்ஸ் எடுக்கும் ஒரு மீம் வைரலாகி வந்தது. அந்த மீமை வைத்து ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில்  “33 வருடங்களுக்குப் பிறகு மேஸ்ட்ரோவுடன்!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this