மேகதாது அணை விவகாரம் #Infographics

மேகதாது  அணை விவகாரம்  #Infographics

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில்  தமிழக தலைமை செயலாளர் கூறிய அனைத்து கூற்றுகளையும் கர்நாடகா பரிசீலிக்கவேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் பரிந்துரைத்த அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படவேண்டும்

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2வது ஆலோசனைக் கூட்டத்தில், கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேகதாது அணை குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளின்படி காவிரி பாசனப் பரப்பை கர்நாடக அரசு அதிகரிக்க முடியாது. அதேபோல், மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் புதிய அணை கட்ட வேண்டுமானால் கடைமடை பாசன மாநிலத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களிலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவது நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this