மனம் மாறினாரா முலாயம்?

மனம் மாறினாரா  முலாயம்?

நாடாளுமன்ற  கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று யாரும் எதிர்பாராத விதமாக உத்திரப்பிரதேசத்தில் பாஜகவின் எதிர் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் முத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் தன் தற்போதைய எம்பி  பதவியின் இறுதி உரையில் பேசிய சில வார்த்தைகள் இந்திய அரசியலையே திருப்பிப்போடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அப்படி என்ன பேசினார் ?

தனது உரையில்,  நான் பிரதமரை வாழ்த்துகிறேன்.  மோடி அவர்கள் நம் எல்லாரையும் முன்னெடுத்து செல்கிறார்.  இங்கு இருக்கும் அனைவரும் மீண்டும் வெற்றி பெற்று மோடி பிரதமராக வேண்டும் என்று  கூற அருகில் இருந்த சோனியாவின் முகத்தில் ஈ ஆடவில்லை

அப்படி பேச காரணம் ?

அதை கிண்டலாக கூற நினைத்தார் என்பது உண்மையாக இருந்தால் அந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் அரசியல் மாற்றத்தை உணராத  ஒரு அரசியல்வாதி அல்ல முலாயம் சிங்.

தான் எதற்காக பேசினோம் என்று நன்கு உணர்ந்தே பேசியுள்ளார். இது அவர் நாடாளுமன்ற சபையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி நன்கு உணர்த்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சமாஜ்வாதி கட்சியில் நடந்த உட்கட்சி மோதலில் தந்தை முலாயம் மகன் அஃகிலேஷுடன்  தோற்றார் என்பது நாடறிந்த ஒன்று.  கட்சியில் ஒதுங்கியே நிலையிலேயே இருந்து வருகிறார் .

அஃகிலேஷ் – மாயாவதி கூட்டணியில்  துளி கூட விருப்பம் இல்லாத முலாயம் தன் அரசியல் கட்சியை மகன் அழித்து விட்டதாகவே எண்ணி வருகிறார்.  ஏனெனில்  இரு துருவ எதிர் கட்சியாக இருந்த சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றாக போட்டியிட்டால் இனி ஒருபோதும் தனிக்கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்காது என்பதே அவரது நிலைபாடு . உதாரணத்துக்கு நம் மாநிலத்தில் திமுகவும் அதிமுகவும் ஒன்றாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் என்ன குத்து நடக்குமோ அதே மாதிரியான நிலைமையை உருவாக்கி வைத்துள்ளார் முலாயம் சிங்கின் மகன் அஃகிலேஷ் யாதவ்.

பாஜகவுக்கு சாதகம் :

உபியில் காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.  காங்கிரஸ் 80இல் 5 இடங்கள் கைப்பற்றுவதே சிரமம் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமேதியில் ராகுல் வெற்றி பெறுவதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க தன்மகனின் அரசியல் தெளிவற்ற கூட்டணியால் நிகழும் என்பதை நன்கு உணர்ந்தே முலாயம் அப்படி பேசியுள்ளார் என்பது பரவலாக கூறப்படும் கருத்தாக உள்ளது .

எப்படியோ கடந்த ஒரு மாதமாக பாஜகவின் 2019 வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக பலர் உதவி செய்து கொண்டு இருக்கின்றனர்.  ரஃபேல் போர் விமானம் வாங்கியது குறித்தான CAG யின் அறிக்கை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட், இப்பொழுது முலாயம் சிங்கின் வெளிப்படையான பேச்சு என “சர்வம் மோடி மயமாக” மாறியுள்ளது.

மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதுபோல் கிண்டலாக முலாயம் பேசியிருந்தால் முலாயம் என்ற முதுபெரும் தலைவர் தன் அரசியல்  வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு என்பதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்டு மந்தைகள் போல் மோடி என்ற தனி நபரை எதிர்க்க நாடு முழுக்க உள்ள மாற்று கருத்து உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக மோடிக்கு எதிராக அணிவகுத்து வரும் நிலையில் முத்த அரசியல் தலைவரின் கருத்து தேர்தலில் முடிவுகளை ஒருபக்கமாக மற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

எழுத்தாக்கம்: விக்னேஸ்வரன்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this