பத்து வருஷத்துல நீங்க மாறவே இல்ல அப்பா

பத்து வருஷத்துல நீங்க மாறவே இல்ல அப்பா

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வருடங்களுக்கு முன் 2009 -ல் `ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்தின் இசைக்காகவும் பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடிதந்தார் . இதைக் கொண்டாடும் விதமாக `ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்தின் 10-ம் ஆண்டு விழா மும்பை தாராவி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

online tamil news ar rahman

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர் ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா ரஹ்மானுடன் உரையாடுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய கதிஜா, “அப்பாவை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. இந்தப் பெருமைக்குக் காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. அவருக்கு நல்லா வர்ற இசையில்லை. அப்பா எங்க மூணு பேருக்கும் சொல்லிக் கொடுத்திருக்க நற்பண்புகளுக்காக அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதேமாதிரிதான் இருக்கீங்க. என்ன எங்கக்கூட இருக்க நேரம் மட்டும் குறைஞ்சிருக்கு.

“ சினிமா மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அப்பா சிறந்து விளங்கினார்.  ஒருத்தருக்கு உதவி செஞ்சார்னாகூட மூணாவது ஆள் சொல்லித்தான் சில விஷயம் எனக்குத் தெரிய வரும். வலதுகை கொடுத்த இடது கைக்குத் தெரியக் கூடாதுங்கிற மொழிக்கு எடுத்துக்  காட்டானவர்’ என்றார்.  நாங்க எங்களோட வேலைகளுக்குப் போகப்போறோம் எங்களுக்கு நீங்க கொடுக்கிற அட்வைஸ் என்னவென்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான் `நான் யாருக்கும் அட்வைஸ் பண்ணமாட்டேன். உங்க மனசு சொல்றத கேளுங்க. எங்க அம்மா எனக்குச் சொல்லித் தந்ததை நான் உங்களுக்குச் சொல்லித் தரணும். உங்க மனசுதான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி’’ என்றார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this