ஹெச் 1 பி விசாவில் புதிய மாற்றம்: ட்ரம்ப்

ஹெச் 1 பி விசாவில் புதிய மாற்றம்: ட்ரம்ப்

H1B விசாவில் புதிய மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாற்றத்தின் மூலம் உயர் கல்வி பெற்று அமெரிக்காவில்  வேலைக்காக தங்கி இருப்பவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படும் என்றும் அதுவும் குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கு வழக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணி செய்ய வந்திருக்கும் திறமையான வர்களை  ஊக்குவிக்கும்  தேவையும் இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த புதிய மாற்றம் செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் குடியேறாமல், அங்கு தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா பெறுவோர், 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி அங்கு பணியாற்றலாம்.

அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து பணியமர்த்திக்கொள்ள இந்த எச்-1பி விசாவை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ட்ரம்ப் அதிபரான பிறகு, ஹெச் 1 பி விசா விண்ணப்பதிலும் அதை பெறுவதிலும் ட்ரம்ப் கடுமையான கட்டுபாடுகளை அமல்படுத்தினார். விண்ணப்பத்தில் மிகச்சிறிய குறை இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க அமெரிக்க குடியேற்றத்துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் இந்த மாற்றத்தை ட்ரம்ப் கொண்டு வந்திருக்கிறார்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this