ரிசர்வ் வங்கியிடம் போதிய மூலதனமோ, உபரி நிதியோ இல்லை

ரிசர்வ் வங்கியிடம்  போதிய மூலதனமோ, உபரி நிதியோ இல்லை

ஆய்வறிக்கை ஒன்றில்  ‘சர்வதேச அளவுகோல்படி, ரிசர்வ் வங்கியிடம், போதிய மூலதனமோ, மத்திய அரசுக்கு தரக் கூடிய அளவிற்கு உபரி நிதியோ இல்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம், 2018, ஜூன் நிலவரப்படி, உபரியாக, 9.33 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதில், 25 சதவீதத்தை வழங்கினால், பொதுத் துறை வங்கிகள் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, தாராளமாக கடன் தரலாம் என, மத்திய அரசு யோசனை தெரிவித்தது.  இதனிடையே, ரிசர்வ் வங்கியின் உபரி நிதி வரம்பு உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அதன் அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை பேராசிரியரும், மும்பையைச் சேர்ந்த, முன்னோடி நிதி ஆய்வு மற்றும் பயிற்சி மைய இயக்குனருமான, அமர்த்தியா லஹரி ,  ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரல் ஆச்சார்யா, அவ்வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் ஆகியோருடன் ஆலோசித்து, மேலும் சில வல்லுனர்களுடன் இணைந்து, ஆய்வறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அதில் உலகளவில், 45 நாடுகளைச் சேர்ந்த, மத்திய ரிசர்வ் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அவ்வங்கிகளின் சொத்துக்கு ஈடான சராசரி மூலதனம் மற்றும் மறுமதிப்பீடு செய்த நிகர மூலதனத்திற்கு இடையிலான விகிதாச்சாரம், 6.56 சதவீதமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது, வளரும் நாடுகளுக்கு, 6.96 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு, 6.60 சதவீத அளவிற்குத் தான் உள்ளது.

அதனால், சர்வதேச மத்திய வங்கிகளுடன் ஒப்பிடும் போது, ரிசர்வ் வங்கியின் மூலதன இருப்பு, உபரியாக இல்லை; எனவே, ரிசர்வ் வங்கி, அதன் செயல்பாடுகள் மூலம் இழப்பை சந்திக்க நேர்ந்தால், சுயாட்சி தன்மையை விட்டுக் கொடுத்து, மத்திய அரசிடம் தான் நிதியுதவியை எதிர்பார்க்க நேரிடும்.

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கு, அதன் செயல்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளவும், இடர்ப்பாடுகளை சமாளிக்கவும், அதிக மூலதன பாதுகாப்பு தேவைப்படும்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this