அணியக்கூடிய ஸ்மார்ட்போன்

அணியக்கூடிய ஸ்மார்ட்போன்

நுபியா பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனம் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய சாதனத்தில் மடிக்கும் திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நுபியா அறிவித்துள்ளது. இதற்கென நுபியா சீனா யுனிகாம் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

நுபியா ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:

– 4.01 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, 82-டிகிரி வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2
– பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
– உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை காக்கும் அசிஸ்டண்ட் வசதி
– உறக்கம், ஓட்ட பயிற்சிகளை டிராக் செய்யும் திறன்
– மியூசிக் பிளேபேக்
– இதய துடிப்பு சென்சார்
– 4ஜி மற்றும் இசிம்
– வைபை, ப்ளூடூத்
– 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அணியக்கூடிய ஸ்மார்ட்போனுடன் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தையும் நுபியா ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது.

Image result for nubia alpha

நுபியா பாட்ஸ் சிறப்பம்சங்கள்:

– ப்ளூடூத் 5 மற்றும் குவால்காம் ஆப்ட் எக்ஸ்
– LDS லேசர் ஆண்டெனா
– 45-டிகிரி எர்கோனோமிக் வடிவமைப்பு
– 6.2 கிராம் எடை
– MEMS மைக்ரோபோன்
– 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 410 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸ்

நுபியா ஆல்ஃபா 4ஜி பிளாக் வெர்ஷன் விலை சீனாவில் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.36,225) என்றும் 18 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பேண்ட் கொண்ட 4ஜி கோல்டு வெர்ஷன் விலை 4499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.46,620) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நுபியா பாச்ஸ் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் விற்பனையில் நுபியா ஆல்ஃபா வாங்குவோருக்கு நுபியா பாட்ஸ் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this