மீண்டும் அலெக்ஸ் பாண்டியனாக ரஜினி

மீண்டும் அலெக்ஸ் பாண்டியனாக ரஜினி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிப்ரவரியில் தொடங்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது.

படத்தில், ரஜினிகாந்த் போலீசாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்பு, கொடி பறக்குது, மூன்றுமுகம், பாண்டியன் என சில படங்களில் அவர் போலீசாக நடித்துள்ளார். அதில் மூன்று வேடங்களில் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தில் நடித்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. தேப்போன்று ஒரு மாஸான போலீஸ் படத்தை தான் தற்போது முருகதாஸ் உருவாக்கி வருகிறாராம்.

இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கெத்தான போலீஸ் ரஜினியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this