திவாலாகும் அம்பானியின் ரிலையன்ஸ்!

திவாலாகும் அம்பானியின் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர், அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்காக அளிக்கப்பட்ட நிதி அளிப்பு காரணமாகத்தான் கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது.

அதிகரிக்கும் கடன் சுமையைக் குறைப்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செல்போன் டவர்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு சொத்துகளை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இது, வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக செல்போன் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் கட்டணச் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம்,  மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, தற்போது செல்போன் சேவை சந்தையில் ஜியோவுக்குப் போட்டியாக வோடஃபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கின்றன. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.

அதே சமயம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக  வழங்கப்படும் குறைந்த கட்டணம் உள்ளிட்ட சலுகைகளால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் இன்னும் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியவில்லை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர், அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்காக அளிக்கப்பட்ட நிதி அளிப்பு காரணமாகத்தான் கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது சுமார் 2.2 லட்சம் செல்போன் டவர்கள் கொண்ட நெட் ஒர்க்கையும், 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலான ஃபைபர் ஆப்டிக் கேபிள்களையும் கொண்டு, சுமார் 300 மில்லியன் சந்தாதார்களுக்கு விரைவான சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் கால் பதிப்பதற்கான வாய்ப்பை நீண்ட காலம் எதிர்நோக்கியிருந்த புரூக்ஃபீல்டு நிறுவனம், சர்வதேச அளவில் 330 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம், ஏற்கெனவே கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனத்தை 2 பில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் காக்கி நாடாவையும் குஜராத்தின் பரூச் என்ற பகுதியையும் இணைக்கும் வகையில் சுமார் 1,400 கி.மீ தூரத்திலான இணைக்கும் வகையில் இயங்கிய ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனம், நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால், அந்த நிறுவனம் புரூக்ஃபீல்டுக்குக் கை மாறியது.

இந்த நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், ஜியோ நிறுவனத்தின் உட்கட்டமைப்பு சொத்துகளைக் கைப்பற்றுவதன் மூலம், இந்தியாவின் மிகப் பெரிய உட்கட்டமைப்புச் சேவை நிறுவனமாக புரூக்ஃபீல்டு நிறுவனமாக உருவாகிவிடும்.

அதே சமயம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் நிதி நெருக்கடி சுமை இல்லாமல், வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் தனது நடவடிக்கைகளை இன்னும் வேகமாக முன்னெடுக்க முடியும். இருப்பினும், இனிமேலும் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாது என்பதோடு, லாபத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அளித்து வரும் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட சலுகைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this