ஒரு நொடிக்கு 23 பேர் கொல்லப்படுகின்றனர் #Infographics

ஒரு நொடிக்கு 23 பேர் கொல்லப்படுகின்றனர் #Infographics

உலகளவில் சராசரியாக சாலை விபத்துகளால் ஒருநொடிக்கு 23 பேர் கொல்லப்படுகின்றனர். இதில் இந்தியா தனக்கு என்று தனி முத்திரை படைத்துள்ளது. உலகளவில் அதிக விபத்துகள் நடக்கும் நாடு இந்தியாதான்.

உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையின்படி சுமார் 1.35 மில்லியன் மக்கள் 2016 ல் சாலை விபத்துகளால் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதுவே 2013 ஆம் ஆண்டு 1.25 மில்லியனாக இருந்தது.
இதில் 9 பேரில் ஒருவர் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பது என்னவென்றால் சாலை விபத்துகள்தான் சிறுவர், சிறுமியர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 முதல் 29 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர் முதல் இளம்வயது உடையோர் வரை சாலை விபதுகளால் உயிரிழந்தோர் அதிகமாக உள்ளனர்.

இந்த அறிக்கை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 2010-2020 வரை ஐநாவால் அறிவிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு காலகட்டத்தில் இப்படி ஒரு அதிர்ச்சுட்டும் ஆய்வு அறிக்கை சாலை பாதுகாப்புக்காக உலகநாடுகள் செய்த ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையே இந்தியா சாலை போக்குவரத்து அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிர் இழந்தோர் 1.51 லட்சமென தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் உலக அமைப்புகளின் ஆய்வின்படி இது சுமார் 3 லட்சமாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. இறுதியாக வெளியான அறிக்கையின்படி இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.46 லட்சமென சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் குறைந்து உள்ளது.

எடிட்டர் குழு

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this