சண்டக்கோழி 2- விமர்சனம்

சண்டக்கோழி 2- விமர்சனம்

ஒரு வரில படத்தை பத்தி சொல்லணும்னா “ Lingusamy is Back”

சண்டக்கோழி முதல் பாகம் ரிலீஸ் ஆகி நல்லா ஹிட் ஆனதுக்கு அப்புறம் யாரு கண்ணு பட்டுச்சுனு தெரில விஷாலுக்கும் லிங்குசாமிக்கும் சண்டை வந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்காம இருந்து இப்ப பதினாலு வருஷம் வனவாசத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணா சேர்ந்து வெற்றிகரமா இன்னும் ஒரு படத்தை  கொடுத்திருக்காங்க.

விஷாலுக்கு இது 25 ஆவது படம். 25 ஆவது படம்  எப்படி இருக்கணுமோ, என்ன Rangeல இருக்கணுமோ அதுக்கு சரியான கதையை பண்ணி அதுல வெற்றியும் பெற்றிருக்கிறாரு. முதல் பாகத்துல விஷாலும் ராஜ்கிரணும் எப்படி இருந்தார்களோ அதே  இளமையோடையும் துடிப்போடயும் இந்த படத்துலயும் அமர்க்களப்படுத்தி இருக்காங்க.

விஷால் நடிப்பு ரொம்ப கச்சிதம். இந்த படத்துக்கு என்ன தேவையோ அத அழகா செஞ்சு முடிச்சிருக்காரு. ராஜ்கிரண் பத்தி சொல்லவே தேவை இல்ல, அவரு வர எல்லா காட்சிலயும் ரொம்ப மரியாதையாவும்,  ஊருக்கே தலைவர்ன்ற ஒரு கம்பீர தோரணையுடன் வராரு.

இடைவேளைக்கு முன்னாடி வர சண்டைக்காட்சியில் ராஜ்கிரணும் விஷாலும் சேர்ந்து மாஸ் பண்ணிருக்காங்க.

படத்துல ரெண்டு கதாநாயகிகள். கீர்த்தி சுரேஷ் விஷாலுக்கு ஜோடியாகவும் வரலட்சுமி வில்லியாகவும் நடிச்சிருக்காங்க. முக்கால்வாசி படத்துல வர மாதிரி பெருசா எதை பத்தியும் அலட்டிக்காம ஜாலியா சுத்திக்கிட்டிருக்க கதாபாத்திரம்தான், இந்த படத்துல கீர்த்தி சுரேஷுக்கும். ரெண்டு இடத்துல ரொம்ப நல்லா ஸ்கோர் பண்ணிருப்பாங்க ஒன்னு அவங்க அறிமுக காட்சி. இன்னொன்னு கோவில்  திருவிழா காட்சிக்கு அவங்க போடுற குட்டி ஆட்டம் தான்.அந்த ரெண்டு இடத்துலயும் ரசிகர்கள் மனச வசீகரிச்சுட்டு போய்ட்டாங்க.

வரலட்சுமி அவங்களுக்கு கொடுக்கபட்டுள்ள வில்லி கதாபாத்திரத்துக்கு  தகுந்த மாதிரி ஒரு திமிரு தனத்தோட நடிச்சிருக்கறது பார்க்கிறதுக்கு புதுசாகவும் நல்லாவும் இருக்கு. ஆனா அவங்க நடிப்புக்கு தகுந்த இடத்தை  திரைக்கதையில் குடுத்துருக்கலாமோனு தோணுது. கொடுத்திருந்தா இதுக்கு மேலயும் இன்னும் பட்டைய கிளப்பிருப்பாங்க.

என்னடா முதல் பாகத்துல வந்த மீரா ஜாஸ்மின், லால் யாரையுமே காணோமே.. டைரக்டர் துண்டா cut பண்ணிட்டாருனு நினைக்கும் போது படத்துக்கு நடுவுல அவங்கள பத்தியும் விவரம் சொல்லி அந்த குறையையும் தீர்த்து இருக்கார் இயக்குனர்.

உண்மையாவே ஒரு திருவிழா போலவே காட்டுது சக்திவேலோட ஒளிப்பதிவு.  முதல் பாகத்துல வந்த தீம் இசை இந்த படத்திலேயும் வச்சது யுவனோட சாமர்த்தியத்தை காட்டிருக்கு. அந்த தீம் இசையோடு மதிப்பு குறையாம எங்கெங்கேல்லாம் தேவையோ அங்கே எல்லாம் மட்டும் வச்சு திரைக்கதைக்கு மேலும் மெருகூட்டி இருக்காரு.

ஒரு பாட்ட தவிர மத்த எல்லா பாட்டும் பார்த்து கேட்டு ரசிக்கிற மாதிரி இருக்கு . ஊர் திருவிழா, ஊர் மக்கள், கரி சோறு, கைகலப்பு, வெட்டு குத்து, பகை.. இப்டி அதர பழசான திரைக்கதையை வச்சி எப்படிடா ஹிட் படம்  கொடுத்திருக்க போறாங்கனு நினைச்சீங்கன்னா, இயக்குனர் லிங்குசாமி அதற்கான பதில் சொல்லிருக்காரு.


 விமர்சகர் 
 கௌசிக் நவி

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

2 Comments

 • Ramu
  October 18, 2018, 9:56 pm

  Move vera level super

  REPLY
  • Chandru@Ramu
   October 22, 2018, 9:02 pm

   Machi sathiyama solu Padam nallava iruku… mokka Padam da

   REPLY
Previous Next
Close
Test Caption
Test Description goes like this