மேற்கு வங்க விவகாரம்: உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களின் பட்டியல்

மேற்கு வங்க விவகாரம்: உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களின் பட்டியல்

சிபிஐ தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிஐயின் விசாரணைக்காக ஆணையர் நிச்சயம் ஆஜராக வேண்டும் என்றும், ஆனால் அவரை சிபிஐ கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கு குறித்து மேற்கு வங்க முதன்மைச் செயலரும், காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிப்ரவரி 20ம் தேதியன்று நடைபெறும் விசாரணையன்று 3 பேரும் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this