நிரந்தர வருமானம் இல்லையா ! அப்படினா இதயத்த பாத்துக்கோங்க !

நிரந்தர வருமானம்  இல்லையா ! அப்படினா இதயத்த பாத்துக்கோங்க !

ஒருவரின் வருமானம் எதிர்பாராதவிதமாகக் குறைந்தால் அல்லது நிரந்தர வருமானம் இல்லாதவர்கள், வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுபவர்கள் ஆகியோருக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்கிறது ஓர் ஆய்வு முடிவு.  அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் நடைபெற்ற  ஆய்வு முடிவு `ஜர்னல் சர்க்குலேஷன்’ (Journal Circulation) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 அமெரிக்காவில் உள்ள ‘கரோனரி ஆர்டெரி ரிஸ்க் டெவலெப்மென்ட் இன் யங் அடல்ட்ஸ்’ (Coronary Artery Risk Development in Young Adults) என்ற அமைப்பினர் அமெரிக்காவின் 4 மாநிலங்களில் வசித்த 3,937 பேரின் குறித்த தரவுகளை ஆய்வு செய்தனர். மேலும் 1990 முதல் 2005 வரை அவர்களின் வருமானத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்காணித்தனர். அதன் அடிப்படையில் 2005 முதல் 2015 வரை அந்த 3,937 பேரின் உடல்நிலை குறித்தும், அவர்களில் இதயநோய் உள்ளிட்ட பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் இறந்தவர்கள் ஆகியோரின் தரவுகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஆய்வு முடிவை வெளியிட்டனர். ஆய்வின்படி, நிரந்தர வருமானம் இல்லாதது ஒருவர் உயிரிழப்பதற்கான வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர வருமானம் இல்லாத பிரச்னை என்பது உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இதயம் மற்றும் ரத்தநாளம் தொடர்பான நோய்கள், இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “வருமானத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவது, நிரந்தர வருமானம் இல்லாததது மிகப்பெரும் பொது சுகாதாரம் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. நிரந்த வருமானம் குறைவதற்கு அரசு திட்டங்களும் முக்கியப் பங்காற்றுகிறது” என்று தெரிவித்தனர். 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this