ஹெல்மெட் வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல…

ஹெல்மெட் வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல…

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருப்பது கட்டாய ஹெல்மெட் சட்டம். இதனால் முடி கொட்டும், கழுத்து வலி ஏற்படும் என பல காரணங்கள் கூறப்பட்டாலும் நம் உயிருக்கு விலை கிடையாது என்பதை நாம் மறக்கக் கூடாது. காவலரிடம் பைன் கட்ட வேண்டுமே என கடனுக்காக தினமும் ஹெல்மேட் அணிவோர்தான் அதிகம். ஆனால் உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவது மிக அவசியம். ஹெல்மெட்டின் வகைகள் என்ன, அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது எனப் பார்ப்போம்.

உடையாமல் உறுதியாக இருப்பது மட்டும் தான் நல்ல ஹெல்மெட் என்று பொத்தாம் பொதுவாக முடிவெடுக்க முடியாது. மோதினால் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில் உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டவை தான் பலன் தரும். எனவே, முடிந்தளவுக்கு நீண்டகாலமாக தயாரிப்பைத் தொடரும் நிறுவனங்களின் ஹெல்மெட்டை தேர்வு செய்வது நல்லது. ஒரிஜினல் நிறுவனத்தின் பெயரைப் போன்றே போலியான பெயருடனும், போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடனும் ஹெல்மெட்கள் விற்பனையாகின்றன.

விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதாவது தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள் நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக் கூடாது.

ஆண் பெண் ஆகிய இருவருக்குமே பொதுவாக முகத்தை முழுவதும் மூடும் ஹெல்மெட்தான் லாங் டிராவலுக்கு சிறந்தது. ஏனெனில் இதுதான் தலைக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது. பூச்சி அடிக்காமல் இருக்க அணியப்படும் பாதி ஹெல்மெட் சிறந்தது அல்ல.

இன்று ஸ்டட்ஸ், எஸ்எம்கே, ஆக்ஸர், எம்டி, வேகா என பல ஹெல்மெட் பிராண்டுகள் வந்துவிட்டன. இவற்றில் எதை வாங்கினாலும் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது டாட் மற்றும் ஈசீஈ தரச்சான்றிதழ் பெற்றதா என்பதைத்தான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஹெல்மெட்களின் தரம் சோதிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஹெல்மெட் தரம் வாய்ந்தவை. பைக்ரேஸர்களும் இந்த தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்களையே பயன்படுத்துகின்றனர்.

மேலும் பிரிட்டனில் வழங்கப்படும் ஷார்ப் ஸ்டார் ரேட்டிங் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். இதில் 5 ஸ்டார்கள் பெற்ற ஹெல்மெட் சிறந்தது. விலை 4000 முதல் 7000 வரை இருக்கும். இந்த தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்கள் 200 வகையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

அதிவேகத்தில் தலை ரோட்டில் மோதும் போது தரம் குறைந்த ஹெல்மெட்கள் உட்புறமாக நசுங்கும். இதனால் தலையில் அடிபடும். தரமான ஹெல்மெட்கள் இவ்வாறு நசுங்காது. தரமான ஹெல்மெட்களில் டபிள் டி ரிங் லாக் இருக்கும். இதனால் ஹெல்மெட் தலையை விட்டு கழண்டு வராது. மேலும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் தலையில் வைப்ரேஷனை உணர முடியாது. உட்புற பேடிங் குஷனை கழற்றி தண்ணிர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this