கேபிள் கட்டண முறை : மார்ச் 31வரை அவகாசம்

கேபிள் கட்டண முறை : மார்ச் 31வரை அவகாசம்

நாடு முழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கேபிள் மற்றும் டி.டி.ஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை ட்ராய் அறிமுகப்படுத்தியது.

மக்களுக்குத் தேவையான சேனல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துமாறு இந்த முறை அமையவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. டிராயின் இந்த முடிவை எதிர்த்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய முறையினால் மாத கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் உயரலாம், எனவே இதைக் கைவிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதை எதிர்த்து வழக்குகள்கூட தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்று என்று டிராய் கூறுகிறது.

இவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் புதிய கட்டண முறையானது பிப்ரவரி 1-ம் தேதியே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து நீட்டித்துள்ளனர். டிராய் இன்று வெளியிட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டண முறையின்படி சேனல்களைத் தேர்வு செய்வதில் பொதுமக்களிடையே இன்னும் குழப்பம் நிலவி வருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது டிராய்.

டிராயின் புதிய கட்டண முறைத் திட்டத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிப்ரவரி 18-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 13-ம் தேதி டிராய் இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this