மும்பை நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதம்

மும்பை நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதம்

விஜய் மல்லையாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதால் மட்டும் வங்கிகளுக்கும், கடன் நிறுவனங்களுக்கும் கடன் திரும்பக் கிடைத்துவிடாது என மும்பை நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதம் செய்துள்ளனர்.

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பிஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடைய சொத்துகள் அனைத்தும், தப்பிஓடிய பொருளாதார குற்றவாளிக்கான தண்டனை சட்டப்படி அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணையில் மும்பை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பாக ஆஜர் ஆன வழக்கறிஞர் அமித் தேசாய், “சொத்துகளைப் பறிமுதல் செய்வது கொடுமையானது. அதேசமயம் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கான புதிய சட்டத்தின்படி சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதால் வங்கிகளுக்கும் கடன்தாரர்களுக்கும் கடன் திரும்பக் கிடைத்துவிடாது.

இப்போது தேவையெல்லாம் வங்கிகளுடனும், கடன்தாரர்களுடனும் கலந்துபேசி சுமுக முடிவை எட்டுவதுதான். அரசு சொத்துகளைப் பறிமுதல் செய்துவிடுவதால் கடன் திரும்பக் கிடைத்துவிடும் என்பது நடக்காத ஒன்று” என்றார்

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this