யார் இந்த விஜய் மல்லையா?

யார் இந்த விஜய் மல்லையா?

உலகமே வியந்து “கிங் ஆப் குட் டைம்ஸ்” என்று செல்லமாய் அழைக்கப்பட்டு புகழின் உச்சியில் இருந்த ஒரு மனிதன், இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு பொருளாதார குற்றவாளி.

இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த ஒரு மனிதனின் வாழ்க்கையை சற்று திரும்பி பார்ப்போம்.

வங்காளத்தில் டிசம்பர் 18 , 1955  அன்று ஒரு மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை விட்டல் மல்லையா ” யுனைடெட் ஸ்பிரிட்ஸ்” ன் நிறுவனர். தனது கல்லூரி படிப்பை, முடித்த நிலையில் தன தந்தையின் திடீர் மரணம். தனது 28 வது வயதில், நிறுவனத்தின் தலைமை பொறுப்பை தன் தலைமையின் கீழ் ஏற்று கொண்டார்.

1983 ல் பணியை தொடங்கிய அவரின் வாழ்க்கையில் அசுர வளர்ச்சி, தன் மதுபான தொழிலை உலகின் 60 நாடுகளுக்கு விரிவுபடுத்தினார். ஒரு காலகட்டத்தில் உலகின் 2வது மிகப்பெரிய மது உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்றார். 1998 – 1999 நிதியாண்டில் அவரது நிகர பொருளாதார மதிப்பு $11 பில்லியன் (டாலர் மதிப்பில்) என்று இருக்க உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது.

90 களில் அவரது “Umbrella Group” – “UB Group” ஏறக்குறைய 60 நிறுவனங்களை தங்களின் குடையின் கீழ் கொண்டுவந்தது. அதில் “BERGER” மற்றும் “CROMPTON” அடக்கம்.

அரசியலால் ஆரம்பித்த போதா காலம்

தன் அரசியல் ஆசையை 2003 ல் திரு சுப்பிரமணிய சுவாமியிடம் (அன்றைய ஜனதா கட்சியின் தலைவர்) தெரிவிக்க, தன்னுடன் இணைத்து கொண்டார். சுவாமி, கட்சியின் தேசிய செயல் தலைவர் பதவி, கர்நாடக தேர்தலும் வந்தது.தன்னை முதல்வராக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம், முக்கியமாக பிரச்சாரத்தில் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருக்கும் “திப்பு சுல்தான்” வாளை மீட்பேன் என்று சூளுரைத்தார். சொன்னபடி பலகோடி செலவு செய்து மீட்டும் வந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி.

பலகோடிகளை இழந்தார் மல்லையா. பின்பு ஆரம்பித்த அனைத்திலும் தோல்வியே கண்டார்.  2005 ல் “கிங்பிஷர் ஏர்லைன்ஸ்” என்னுடைய கருத்துப்படி ” இந்தியாவின் தலைசிறந்த நிறுவனம்” இன்று வரை. சிறந்த சேவையால் நன்மதிப்பை பெற்ற அந்த நிறுவனம்,  தன் தலைவரின் போதாத காலத்தாலோ என்னவோ கச்சா எண்ணையின் வரலாறு காணாத விலையேற்றத்தால் சிக்கி தவித்தது.

 

பின்பு 2013 ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தயவில் ஒருமுறை 1100 கோடி மதிப்பில் “பெயில் அவுட்” முறையில் SBIயிடம் கடன் பெற்று இயங்க முயற்சித்தும் தோல்வி, 2016 ல் மூடப்பட்டது.

போர்ஸ் இந்தியா எனும் F1 கார் பந்தய அணி உருவாக்கியதில் நஷ்டம், RCB எனும் அணி வாங்கியதில் மீண்டும் நஷ்டம் என அவரது துர்பாக்கியம் துரத்தியது. அவரின் பெரிய அடி ஆட்சி மாற்றம். புதிதாக வந்த பிஜேபி அரசாங்கம், பொருளாதார குற்றங்களை களை எடுக்க தொடங்கியது. அதீத நெருக்கடியில்  2016 ல் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். அங்கேயும் விடாத இந்த அரசு அவரை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது தன் முழுகடனையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் மல்லையா.

எவ்வளவு திறமை, பணம், பதவி இருந்தாலும் தன் ஆடம்பர வாழ்க்கையால், தோல்வியை சந்தித்து இன்று சிறை வாசல் அருகில் நிற்கும் மல்லையா, இளம் தொழில்முனைவோரின் தவறான முன்னுதாரணமாக திகழ்கிறார்.

-விக்னேஸ்வரன்

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this