ஜிப்ரான் இசையில் பாடிய விக்ரம்!

ஜிப்ரான் இசையில் பாடிய விக்ரம்!

`தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா எடுத்து முடித்திருக்கும் திரைப்படம் `கடாரம் கொண்டான்’. `சாமி ஸ்கொயர்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிக்க விக்ரம் கமிட் ஆகியிருக்கிறார். விக்ரம் மற்றும் அக்‌ஷரா ஹாசன் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இருவரும் ஒன்றாக நடித்திருந்தாலும் படத்தில் இவர்கள் இருவருக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்குமா என்பது தெரியவில்லை. கமல் தயாரிப்பில் மலேசியா மற்றும் சென்னையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது.

படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் ஒரு பாடலை நடிகர் விக்ரமே பாடியிருக்கிறார் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜிப்ரான் அவரது அந்த  ட்விட்டர் செய்தியில் `கடாரம் கொண்டான்’ படத்துக்காக விக்ரம் சார் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கும். மிகவும் உற்சாகமாகவும் இருக்கும்”. என்று கூறியுள்ளார். ஆக்‌ஷன், நடிப்பு என விக்ரமுக்கு ரசிகர்கள் இருந்தாலும், அவர் பாடும் பாடல்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. `சாமி 2′ படத்திலும் விக்ரம் தனது சொந்தக் குரலில் பாடல் ஒன்றைப் பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this