முடிவுக்கு வருகிறதா வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் உறவு?

முடிவுக்கு வருகிறதா வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் உறவு?

‘சீனாவிலிருந்து அமேசான் வெளியேறியதுபோல, ஃப்ளிப்கார்ட்டை விட்டு வால்மார்ட் நிறுவனம் வெளியேறக்கூடும்’ என்று மோர்கன் ஸ்டேன்லி எச்சரித்துள்ளது. ‘இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தால் தொடர்ச்சியாக, லாபகரமாக இயங்க முடியாதென்பதால், வெளியேறுவதைத் தவிர வேறு வழியிருக்காது. இதேநிலைதான், சீனாவில் அமேசான் நிறுவனத்துக்கு ஏற்பட்டது’ என்று மோர்கன் ஸ்டேன்லி கூறியுள்ளது.

“இந்தியா, மிகக் கவர்ச்சிகரமான சில்லறைச் சந்தைகளில் ஒன்றாகும். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் எங்களது முதலீடு இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று நம்பிக்கையோடு இந்தியாவில் காலடி எடுத்துவைத்தது. கடந்த ஆண்டில்தான் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இச்சூழலில்,  இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி கொண்டுவரப்பட்ட புதிய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையால், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இவர்களின் விற்பனைப் பட்டியலில் இருந்து 25 சதவிகித பொருள்களை நீக்கவேண்டிய கட்டாயம்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனையில், செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலீட்டுக் கொள்கையால், பெருமளவு பாதிக்கப்படுவது இந்த எலெக்ட்ரானிக் பொருள்களின் விற்பனைச் சந்தைதான். ஆன்லைன் விற்பனையில் பிரத்யேக விற்பனையிலிருந்த செல்போன் நிறுவனங்களை விலக்கிக்கொள்ள வேண்டியிருந்ததால், ஆன்லைனில் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது, தொடர்ச்சியாக நான்கு நாள்களாக ஆன்லைன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மோர் கன் ஸ்டேன்லி நிறுவனத்தின் எச்சரிக்கை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this