கரையேறுவாரா நயினார்?

கரையேறுவாரா நயினார்?

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் களம் பாஜக விற்கு ஆதரவாக மாறிவருகிறது. முதல் முறையாக தேசிய கட்சிக்கு மற்றும் கூட்டணி கட்சிக்கு தாரைவார்த்த அதிமுக மற்றும்

திமுகவின் பிரச்சனைகளும் யுக்திகளையும் நாம் விரிவாக பார்ப்போம்.

சிறுபான்மையினரின் தொகுதி

2009 முதல் நடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு முஸ்லீம் வேட்பாளரே செல்லும் தொகுதியாக இராமநாதபுரம் விளங்குகிறது. ஏறக்குறைய 2 லட்சம் முஸ்லிம்களின் ஒட்டு வங்கி உள்ள ஒருசில தொகுதிகளில் இதுவும் ஓன்று. ஆதலால் பெரும்பாலும் முஸ்லீம் வேட்பாளர்களுக்கே திமுக, அதிமுக ஒதுக்கி வந்தன. இதை 2014 நாடாளுமன்ற தேர்தல் மாற்றியமைத்தது.

2014 மோடி அலை

2014  மோடி அலை தமிழகத்தில் எங்கு விசியதோ இல்லையோ கோவை மற்றும் ராமநாதபுரத்தில் பலமாக வீசியது என்றே கூறலாம். கன்னியாகுமரி மற்றும் கோவையை தவிர்த்து பாஜக

1,70,000 ஓட்டுகள் வாங்கிய தொகுதி ராமநாதபுரம். அதிகம் பிரபலமில்லாத குப்புராமு என்ற வேட்பாளர், பலமில்லாத கூட்டணியுடன் பாஜகவின் இந்த ஓட்டுகள் தேசிய ஆளும் கட்சியின் விருப்ப தொகுதி பட்டியலில் இணைக்க செய்தது.

2019 களநிலவரம்

பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் முன்னாள் அமைச்சர், திமுகவின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக நவாஸ்கனி (ST கூரியர் தலைவர்) மற்றும் அமமுக

சார்பாக வ.து.ந.ஆனந்த் (முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மகனும் முக்கிய வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில்  அமமுக வ.து.ந.ஆனந்த் காலத்தை முற்றிலும் மற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளார்.

உள்ளடி வேலையாள் திணறும் திமுக கூட்டணி

இராமநாதபுர மாவட்டத்தில் திமுக இரு பிரிவாக செயல்படுகிறது.சு.ப. தங்கவேலன் அணி மற்றும் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் அணி இருவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். பாஜக மற்றும் அமமுக வேட்பாளர்களும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு அணியிலும் நயினார் மற்றும் ஆனந்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். முஸ்லீம் லீக் வேட்பாளர்  சுப. தங்கவேலனை முன்னிறுத்துவதால் முத்துராமலிங்கம் அணி செம கடுப்பில் அமமுக  ஆனந்திற்கு மறைமுக ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம் உள்ளடி வேலையாக “சுப” தன மகனுக்கு கொடுக்காத சீட்டிற்கு பதிலாக நயினாரை ஜெயிக்க வைத்து தான் இழந்த மாவட்ட செயலாளர் பதவியை பெறலாம் என்று தன் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இதனிடையில் மாட்டிக்கொண்ட நவாஸ்கனி முழி பிதுங்கி நிற்பதே நிதர்சனம்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

2014 தேர்தலில் திமுக வாங்கிய 2,80,௦௦௦ ஓட்டுக்களை திரும்ப பெறுவதே ஏணி சின்னத்தில்  நிற்கும் நவாஸ்கனிக்கு மிகவும் கடினமாக கருதப்படுகிறது.அமமுக ஆனந்த் தன் களப்பணியால் முக்குலத்தோர் மற்றும் கிராமபுற ஓட்டுக்களை கண்டிப்பாக கவர்வார். போட்டியில் இருக்கும் ஒரே உள்ளூர் வேட்பாளர் என்பதாலும் பாஜகவிற்கு போட்டி வேட்பாளராக அவரே திகழ்வார் என்பது உறுதி . பாஜகவை பொறுத்தவரை தன் கட்சி ஓட்டு 1,70 ,000 மற்றும் அதிமுக 2014 ல் பெற்ற நான்கு லட்சம் ஓட்டுகளில் 50% பெற்றாலே சுலபமாக வென்றுவிடும் என்பது அவர்க்ளின் கணிப்பு.

ஏணி எற உதவாது என்று தெரிந்ததால் அமமுக ஆனந்த் மற்றும் நயினார் இடையே கடும் போட்டி நிலவும். இதில் தாமரை மலர்கிறதா அல்லது பரிசுப்பெட்டி கிடைக்கிறதா என்பது மே 23 ல் தெரிய வரும்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this